தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்துவிட்டு கடந்த மே 30-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பெரியகோளாப்பாடி அருகே அவர் தன் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் வந்த மர்மக் கும்பல் இருவரையும் மிரட்டிக் காட்டுக்குள் கடத்திச் சென்றது. அங்கு அப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கும்பல், அவரது 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததோடு, இருவரையும் நிர்வாணமாக்கி செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளது. மறுநாள் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டி, ‘ஜி-பே’ மூலம் ரூ.4,000 பறித்ததால், பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் 100 என்ற எண்ணில் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே (மே 31-ஆம் தேதி இரவு), திருவண்ணாமலை பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்யும் 23 வயது இளம்பெண் கிரிவலம் முடித்துவிட்டு, கால் வலி காரணமாகத் தன் ஆண் நண்பரை இருசக்கர வாகனத்தில் வரவழைத்துள்ளார். இருவரும் அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்மக் கும்பல் அதே பாணியில் இருவரையும் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று, நிர்வாணப்படுத்திப் பாலியல் சித்ரவதை செய்து தாக்கியுள்ளது. மேலும், பெண்ணின் 2 கிராம் தங்கக் கம்மலைப் பறித்துக்கொண்டு, அடுத்த நாள் ஜி-பே மூலம் பணம் அனுப்ப வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஜூன் 1-ஆம் தேதி திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பௌர்ணமி கிரிவலத்தின்போது அடுத்தடுத்து அரங்கேறிய இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக 2 வழக்குகளைப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்துத் தீவிர வேட்டையில் இறங்கினர். போலீசாரின் தீவிர விசாரணையில், இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலைச் சேர்ந்த 11 பேர் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆடையூர் வாசுதேவன், பெரியபாலியப்பட்டு ஆகாஷ், அப்பு, அரிகரன், சர்மா, அருண்குமார், சிவகணேசன் மற்றும் 16 வயது சிறுவன் உட்பட 8 பேரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள எஞ்சிய 3 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…