தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகளைக் களைந்து, மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஒட்டுமொத்த அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு துறை வாரியாக தனித்தனி ஆய்வுக் கூட்டங்களை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் மாமூல் விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் நடத்தினார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த முக்கிய வாக்குறுதியான “டாஸ்மாக்கில் கூடுதல் 10 ரூபாய் வசூலை ஒழிப்போம்” என்பதை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் தொடக்கத்திலேயே அதிகாரிகளை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதல்வர், எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக விற்கப்படுவது ஏன் இன்னும் தடுக்கப்படவில்லை என்றும், அனைத்து கடைகளிலும் UPI டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் பார்கோடு ஸ்கேனிங் முறையை முழுமையாக அமல்படுத்துவதில் ஏன் தாமதம் என்றும் கூறி அதிகாரிகளைத் திணறடித்தார். வெறும் தற்காலிக இடைநீக்கம் அல்லது இடமாற்றம் போன்ற நடவடிக்கைகள் முறைகேடுகளைத் தடுக்கப் போதாது என்றும் அவர் கண்டிப்புடன் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே. விக்னேஷ், தவறு செய்யும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதோடு, ஊழியர்கள் தரப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். மதுப் பெட்டிகளை இறக்குவதற்கான கூலி, கடை தூய்மைப் பணிகள், உடைந்த பாட்டில்களுக்கான இழப்பு மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற பராமரிப்புச் செலவுகளை ஊழியர்களே தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து ஏற்க வேண்டியுள்ளதையும், இதன் காரணமாகவே ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் ஊழியர் போராட்டங்கள் நடைபெற்றன என்றும் விளக்கப்பட்டது. ஊழியர்களின் இந்த நியாயமான தேவைகளையும், குறைந்த ஊதியப் பிரச்சினையையும் கேட்டறிந்த முதலமைச்சர், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுத்தார்.
பொதுமக்களுக்கு எவ்வித கூடுதல் சுமையும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் கடைகளின் இறக்குக் கூலி மற்றும் பராமரிப்புச் செலவுகளை அரசே நேரடியாக ஏற்கும் புதிய திட்டத்தை வகுக்க உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில், ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் கடைகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து நிதித்துறையுடன் ஆலோசித்து நிரந்தரத் தீர்வு காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பள்ளிக்கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்ளாட்சி போன்ற முக்கிய துறைகளிலும் நிலவும் முறைகேடுகளைச் சீரமைக்க முதலமைச்சர் விஜய் தீவிரமாகத் திட்டமிட்டுள்ளார். இந்த அதிரடித் தொடர் கூட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் புதிய அரசின் உறுதியான அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…
இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…
திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…