ஐயோ பாவம்… இளம் பெண் ஊழியர் கொடூர மரணம்… சமையலறையில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்… மத்தியப் பிரதேசத்தில் பகீர் சம்பவம்…!!

By Swetha on ஆடி 27, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் கஜ்ரானா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த 26 வயதான பாலக் கேசவ் என்ற தனியார் வங்கி ஊழியர், தனது வீட்டின் சமையலறையில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹர்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு நாட்களாகக் குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புகளை ஏற்காததால், சந்தேகமடைந்த அவரது தந்தை வீட்டு உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். வீட்டு உரிமையாளரும் அக்கம் பக்கத்தினரும் கதவை உடைத்துப் பார்த்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கஜ்ரானா காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். சமையலறையில் இருந்த கேஸ் பர்னர் திறந்த நிலையில் இருந்ததும், பெண் உயிரிழந்து ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. மேலும், உயிரிழந்த பெண்ணின் தலையில் காயங்கள் கண்டறியப்பட்டதால், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி சான்றுகளைச் சேகரித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும், அனைத்துக் கோணங்களிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.