கன்னியாகுமரி டூ சென்னை…. அண்ணாமலை கையில் எடுத்த ‘அந்த’ சீக்ரெட் ஆயுதம்… பின்னணியில் மெகா கணக்கு… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்….!

By Nanthini on ஆடி 27, 2026

Spread the love

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்வைத்து, ஆகஸ்ட் 2-ம் தேதி கன்னியாகுமரியில் தூய்மைப் பணியைத் தொடங்கி வைக்கும் அண்ணாமலை, அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16-ம் தேதி சென்னையில் பிரமாண்ட நடைபயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வெளிப்படைக்கு இது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரமாகக் காட்டப்பட்டாலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து மக்களின் ஆதரவைத் திரட்டுவதே இதன் முதன்மை நோக்கமாகும். அத்துடன், இந்தத் தீவிரப் பிரசாரத்தின் மூலம் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கேற்ப வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.