ஐயோ காப்பாத்துங்க… அலறித் துடித்த பள்ளி மாணவி… மின்சார ரம்பத்தால் கொடூர தாக்குதல்… ஆந்திராவில் நடுநடுங்க வைக்கும் பயங்கரம்…!

By Swetha on கார்த்திகை 2, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராப்தாட்டில் உள்ள மாவட்ட பரிஷத் உயர்நிலைப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த ஹேமந்த் என்ற வாலிபர், 10-ஆம் வகுப்பு மாணவி மீது மின்சார ரம்பத்தால் கொடூரத் தாக்குதல் நடத்தினார். ஒருதலையாகக் காதலித்து வந்த நிலையில், மாணவி தன் காதலை நிராகரித்ததால் ஆத்திரமடைந்து அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். இத்தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவியும் காயமடைந்தார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய முக்கியக் குற்றவாளி ஹேமந்தைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர் ஆத்மகூர் வனப்பகுதியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் கத்தியால் போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றார். தற்காப்புக்காகவும் அவர் தப்புவதைத் தடுக்கவும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்தார்.

   

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஹேமந்த் அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிடிபட்டபோது அவர் “கும்பிட்டு கேட்கிறேன் சார்.. என்னைக் காப்பாற்றுங்கள்!” என அழுது கதறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.