அய்யய்யோ… என்ன கொடுமை இது?… உணவு பரிமாறிய மனைவி மீது தாக்குதல்… விஜயதசமி நாளில் நடந்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 22, 2026

Spread the love

பெலகாவி முரளிதர் காலனியில் விஜயதசமி தினத்தன்று குடிபோதை தகராறு காரணமாக 23 வயது அஸ்வினி வித்தல் ஹெக்டே என்ற பெண் அவரது கணவர் வித்தல் ருத்ரப்பா ஹெக்டே என்பவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவரின் குடிப்பழக்கம் மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாக இவர்கள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று தனது மாமியாருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த அஸ்வினிக்கும், அவரது கணவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

   

கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவரை ஏ.பி.எம்.சி காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டு சிறு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், காவல்துறையினர் இக்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.