ஹைதராபாத் பழைய நகரப் பகுதியில் உள்ள நாராயணா ஜூனியர் கல்லூரியின் சந்தோஷ்நகர் கிளையில், தேர்வுத் தாள் தொடர்பாக இரு சிறுவர்களுக்கு இடையே எழுந்த சிறு தகராறு, இறுதியில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதலாக மாறியது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக, சையத் நோமன் என்ற மாணவர் இந்தோ-இங்கிலீஷ் 7B மைதானத்தில் வைத்து ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அம்மாணவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வன்முறைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
