கே.ஜி.எஃப் நகரத்தில் உள்ள மகாவீர் ஜெயின் கல்லூரியில் நாற்காலியை நகர்த்துவது தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மாணவி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலாக மாறியுள்ளது. வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
நாற்காலியை முன்னால் நகர்த்துவது குறித்துத் தொடங்கிய இந்த வாக்குவாதத்தின் போது, சக மாணவர்கள் அந்த மாணவியைக் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சில மாணவர்கள் அவளை நோக்கி வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த மாணவி அவர்களில் ஒருவரை அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு மாணவன், அந்த மாணவியை கொடூரமாகத் தாக்கியதில், அவர் தரையில் விழுந்து சுயநினைவை இழந்தார்.
https://twitter.com/HateDetectors/status/2097657554654675232/video/1
காயமடைந்த மாணவி உடனடியாக சிகிச்சைக்காக கே.ஜி.எஃப் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ராபர்ட்சன்பேட்டை காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
