அனந்தபுரம் ஊரக மண்டலம், நாராயணபுரம் பகுதியில் 5 சென்ட் வீட்டுமனை நிலம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீஹரி என்பவரும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து சுமார் 20 பேருடன் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த நிலத் தகராறில் சாய் என்ற சிறுவனை குறிவைத்து அவர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கம்புகள் மற்றும் கொடிய ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த சிறுவன் சாய், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று சேர்ந்து ஒரு சிறுவன் மீது காட்டிய இந்தத் தீவிரம் அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/pulsenewsbreak/status/2109910005738787212/video/1
உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த சாய் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், நிலப் பிரச்சினையில் சிறுவன் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
