கடவுளே… என்ன கொடுமை இது…! ஒரே விபத்தில் உயிரிழந்த அண்ணன்-தங்கை… பிள்ளைகளை பறிகொடுத்து கதறும் பெற்றோர்…. பெரும் சோகம்…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிம்ப்ரி பகுதியில் உள்ள நிக்டி பூனா கேட் ஹோட்டல் அருகில் நிகழ்ந்த கோரமான பைக் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கௌசிக் முல்யா (21) தனது தங்கை ரிஷிதா முல்யாவுடன் (17) பைக்கில் ஊருக்குத் திரும்பியபோது பின்னால் வந்த மற்றொரு பைக் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கௌசிக் முல்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ரிஷிதாவும் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கௌசிக் கணினிப் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வந்ததும், ரிஷிதா 11-ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களின் தந்தை ரவி முல்யா தையற்கலைஞராகப் பணிபுரிந்து வரும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது பிள்ளைகளை இழந்த மாபெரும் துயரத்திலும், துக்கத்தின் உச்சத்தில் இருந்த அந்தப் பெற்றோர், மற்றொருவரின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் தங்களது மகள் ரிஷிதாவின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். பெற்றோரின் இந்தத் துணிச்சலான மற்றும் மனிதநேயமிக்க முடிவானது தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் நெகிழ்ச்சியையும் பெற்று வருகிறது.