“அப்பாவை விட்ருங்க… ப்ளீஸ்…” கண்ணீர் விட்டு கெஞ்சிய மகள்கள்… மிருகத்தனமாக தாக்கி தலித் வாலிபரை கொன்ற கொடூரர்கள்…. குலை நடுங்க வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் கமலபூர் காவல் எல்லைக்கு உட்பட்ட லூதௌரா கிராமத்தில், இரு தரப்பு மோதலின் போது 35 வயதுடைய மனோஜ் கவுதம் ( என்ற தலித் நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது மனோஜ் கவுதமை கும்பல் ஒன்று சூழ்ந்து தாக்கியதைக் கண்டு அவரது மகள்கள் அருகில் நின்று கதறி அழுது கெஞ்சியுள்ளனர்.

https://twitter.com/TOILucknow/status/2110988139431067898?s=20

   

குழந்தைகளின் கண்ணீரைப் பற்றியும் கவலைப்படாமல் மிருகத்தனமாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கமலபூர் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.