“தங்கைக்கு நடந்த அநீதி…” பண பலத்தால் ஊரை சுற்றிய குற்றவாளி…! கோபத்தில் பஞ்சாயத்து தலைவர் மகனை சுட்டுத் தள்ளிய அண்ணன்…! பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

கிராமப் பஞ்சாயத்து தலைவரின் மகன், அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், பஞ்சாயத்து தலைவரின் மகன் தனது பண பலத்தைப் பயன்படுத்தி எந்தப் பயமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வந்துள்ளார். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

தனது தங்கைக்கு நேர்ந்த கொடூரத்திற்குச் சட்ட ரீதியாக நீதி கிடைக்காததால் கோபமடைந்த அப்பெண்ணின் சகோதரன், பழிவாங்கும் நோக்கில் துப்பாக்கியை எடுத்துப் பஞ்சாயத்து தலைவரின் மகனை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். குற்றவாளி தண்டிக்கப்படாமல் உலா வந்ததால் ஆத்திரத்தில் துப்பாக்கியைக் கையில் ஏந்திப் பழிவாங்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.