உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், தனது தங்கையுடன் காதல் வயப்பட்டுப் பழகுவதை நிறுத்த மறுத்த 21 வயது இளைஞரை, பெண்ணின் சகோதரன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து சடலத்தைக் கால்வாயில் வீசிய கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீரட் சிந்தவாலி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான ரோஹித் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சுஜால் என்பவரின் தங்கையுடன் பழகி வந்துள்ளார்.
இதனை அறிந்த சுஜால், தனது தங்கையுடன் பேசுவதை நிறுத்துமாறு ரோஹித்தைக் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் ரோஹித் அதனைக் கேட்காமல் தொடர்ந்து பேசி வந்ததால் ஆத்திரமடைந்த சுஜால், தனது உறவினர்களான அக்ஷய், குணால், அமித் மற்றும் ஜதின் ஆகியோருடன் சேர்ந்து ரோஹித்தைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஐந்து பேரும் சேர்ந்து ரோஹித்தைக் கழுத்தை நெரித்துப் படுகொலை செய்ததுடன், கொலையை மறைப்பதற்காக அவரது சடலத்தை போலா ஜால் அருகே உள்ள கங்கநஹர் கால்வாயில் வீசியுள்ளனர்.
இதற்கிடையில், காணாமல் போன ரோஹித்தின் உடலை மீட்டுத் தரக் கோரி அவரது குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.எஸ்.பி அலுவலகம் முன்பு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதையடுத்துத் தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், திங்கட்கிழமை அக்ஷய், குணால், அமித் மற்றும் ஜதின் ஆகிய நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான சுஜாலைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், கால்வாயில் வீசப்பட்ட ரோஹித்தின் சடலத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…