2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அடுத்தடுத்து காயம் சார்ந்த சிக்கல்களைச் சந்தித்து வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நட்சத்திர வீரர் தோனியைத் தொடர்ந்து, அணியின் நடுவரிசை நம்பிக்கையான சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காயத்தால் விலகிய எல்லீஸ்க்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஸ்பென்சர் ஜான்சனும் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் அடுத்த மாதம் தான் அணியுடன் இணைவார் என்பதால், பந்துவீச்சு வரிசையில் பெரும் சவால் எழுந்துள்ளது.
இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (மார்ச் 30) நடைபெறவுள்ள தனது முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ள நிலையில், மாற்று வீரர்களைக் கொண்டு சிஎஸ்கே இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரின் தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ள இந்தத் பின்னடைவுகளைக் கடந்து, மஞ்சள் படை தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
