“குஷியோ குஷி”.. காலை உணவு திட்டம்.. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பிறகு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் 1416 நகர்ப்புற நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இப்படியான நிலையில் இந்த பள்ளிகளில் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருந்தால் அந்த பள்ளிகளின் பட்டியலை அனுப்பவும் அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஏதேனும் பள்ளிகள் விடுபட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.