மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த முதல்வர்.. விஜய் மீது உரிமை மீறல் நடவடிக்கை..? முன்னாள் சபாநாயகர் அப்பாவு அதிரடி கேள்வி..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் “உறுப்பினர்கள் தங்களின் உடல் மொழியாலோ அல்லது வாய்மொழியாகவோ யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது” என்று சபாநாயகர் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ள முன்னாள் சபாநாயகர் அப்பாவு, சபாநாயகர் இத்தகைய கடுமையான உத்தரவை அவையில் பிறப்பித்த அடுத்த நாளே, தற்போதைய முதலமைச்சர் அதற்கு மாறாக நடந்து கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவையில் அப்போது இல்லாத முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, முதலமைச்சர் அவையில் கிண்டலாகவும் கேலியாகவும் பேசியுள்ளார் என்று அப்பாவு சுட்டிக்காட்டியுள்ளார். இது சபாநாயகரின் உத்தரவை மீறிய “அவை உரிமை மீறல்” செயல் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இத்தகைய விதிமீறலில் ஈடுபட்ட முதலமைச்சர் மீது சட்டப்பேரவைத் தலைவர் தாமாக முன்வந்து உரிய அவை உரிமை மீறல் நடவடிக்கையை எடுப்பாரா என்றும் காரசாரமாக வினவியுள்ளார்.