நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து கேக் வெட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தப் புகைப்படத்திற்குத் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான சார்மி கவுர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கமெண்ட் தற்போது இணையத்தில் கடுமையான பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விஜய் – த்ரிஷா ஜோடியை “Pure Gold couple, Rebels” என்று குறிப்பிட்டு சார்மி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சார்மியின் இந்த வெளிப்படையானப் பதிவு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்குக் கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. முன்னதாக, தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் தான் நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளும் வந்ததால், ‘ஒரு சிறப்பு நாளில் சிறப்புக் கொண்டாட்டம்’ என்று சார்மி மற்றொரு பதிவையும் இட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
