உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 19 வயது ஷாதாப். இவர் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய தாய் மாமாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஷாதாப் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருமணத்திற்கு மறுநாள் இருந்து ஷாதாப்பை காணவில்லை. இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கொய்யாப்பழத் தோட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்கு பக்கத்தில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவருடைய தொண்டை கத்தியால் அறுக்கப்பட்டு தலை கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களை காவல்துறையின் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நல்ல ரீல்ஸ் எடுப்பதற்கு உயர்தரத்திலான ஃபோன் தேவைப்பட்டது. அதற்காக இவரை கொலை செய்து அவருடைய ஐபோனை எடுத்துக் கொண்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்கள். திருமணத்தன்று இரவில் வீடியோ எடுப்பதாக கூறி அவரை தனியாக அழைத்து சென்ற சிறுவர்கள் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்கள். இதற்காக நான்கு நாட்களுக்கு முன்பே அவர்கள் திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்கள். இதனையடுத்து காவல்துறையினர் கொலைக்கான ஆதாரத்தை மறைத்ததாக சிறுவனின் உறவினர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார்.
