கிரேட்டர் நொய்டா மேற்கில் ஒரு இளைஞர் தன்னோட காதலியை பிளாட்டின் பால்கனியில் கொடூரமாக தாக்கி தவறாக நடந்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த முழு சம்பவமும் முன்புற பிளாட்டில் வசிக்கும் நபர் ஒருவரால் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞன் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வது தெளிவாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளார்கள்.
महोदय यह घटना अमरपाली गोल्फ कोर्स की है Tower number K9 13 floor का है जहां पर एक लड़की को प्रताड़ित किया जा रहा है और जहां तक जान से मारने की कोशिश किया जा रहा है कृपया आप जांच कर कर कार्रवाई करें महोदय@Uppolice @dgpup @ @myogiadityanath pic.twitter.com/4gjhJBthzA
— Satendar Mishra (@SatendarMishra6) July 30, 2025
இவருக்கு சுமார் 24 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு சமூகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்குள் நடக்கும் குடும்ப வன்முறைகள் குறித்தும் மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
