ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகரில் கொலை குற்றவாளிக்கு அங்குள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது .கடந்த 10 மாதத்திற்கு முன்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது குழந்தைகள் உட்பட 13 பேரைக் கொன்ற நபருக்கு மரண தண்டனை விதித்தது.
இதனை அடுத்து பொதுவெளியில் வைத்து அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மூலம் கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றி உள்ளார்கள். மரண தண்டனை நிறைவேற்றும் போது யாரும் வீடியோ, கேமரா வசதி உள்ள செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பலரும் மரண தண்டனை செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
