கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இன் தலையீட்டின் காரணமாக நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் போர் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்தப் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தப் போரால் பெரிதும் பாதிக்கப்படும் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.
அங்கு உணவு இல்லாமல் மக்கள் குறிப்பாக குழந்தைகள் தவித்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை என்று காசா மனிதாபிமான அறக்கட்டளை வழங்கிய உணவுப் பொருளை வாங்க சென்ற 17 அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. இப்படியான நிலையில் காசாவில் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிடும் சிறுவனின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், உண்ண உணவில்லை, மண்ணை சாப்பிடும் நிலைக்கு கொண்டு வந்துட்டீங்க, இது சரியா, கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க, எங்களின் பசியை போக்க மாவு பொருட்கள் வேண்டும், எங்களின் இந்த நிலை எப்போது தான் மாறும் என்று சிறுவன் கண்ணீரோடு பேசும் அந்த வீடியோ வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது.
“We are eating sand instead of bread.”
A Palestinian child in northwestern Gaza cries out in frustration from extreme hunger, having lost hope of obtaining even a bag of flour amid a severe shortage of humanitarian aid pic.twitter.com/sk8byFfZUt
— TRT World (@trtworld) June 20, 2025
