சினிமாவுல மட்டும் தான் ஹோம்லி.. ரியல்ல அல்ட்ரா மாடர்ன்.. சஞ்சனா நடராஜனின் லேட்டஸ்ட் கிளக்ஸ்..!

By Nanthini on பங்குனி 15, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நெருங்கி வா முத்தமிடாதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் சஞ்சனா நடராஜன்.

   

இறுதிச்சுற்று திரைப்படத்தில் ரித்திகா சிங் உடன் பாக்சிங் மாணவியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனில் வெளியான இந்த படத்திலும் இவர்தான் நடித்திருந்தார்.

   

 

2018 ஆம் ஆண்டு வெளியான விஜய் தேவரகொண்டாவின் நோட்டா திரைப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0, கேம் ஓவர், ஜகமே தந்திரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்துள்ளார்.

சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் மலையாளத்தில் டியர் ஃப்ரெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இறுதியாக எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான பாட்டில் ராதா திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சஞ்சனா நடராஜன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.