Connect with us

போஸ் வெங்கட் சோனியா தம்பதிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த பசங்க இருக்காங்களா..? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!!

CINEMA

போஸ் வெங்கட் சோனியா தம்பதிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த பசங்க இருக்காங்களா..? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!!

பிரபல நடிகரான போஸ் வெங்கட் மெட்டிஒலி சீரியலில் நடித்து பிரபலமானார். இவர் ஈரநிலம், சிவாஜி, மருதமலை, தாம் தூம், சிங்கம், சரோஜா, யாமிருக்க பயமேன், 36 வயதினிலே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் போஸ் வெங்கட் நடித்துள்ளார்.

   

இவரது மனைவி சோனியா போஸ் வெங்கட் 3 வயதில் மலையாள திரைப்படமான இவள் ஒரு நாடோடி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் பேபி சோனியா என பலராலும் அறியப்படுகிறார். கடந்த 1987-ஆம் ஆண்டு நவரத்தி பூவு என்ற திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநிலம் விருது வழங்கப்பட்டது.

   

 

சோனியா போஸ் ஆசைகள், மலர்கள், முகூர்த்தம், பாசம், செல்லமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சன் டிவியில் கடைசியாக பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். போஸ் வெங்கட் சோனியா தம்பதியினருக்கு தேஜஸ்வின் என்ற மகனும், பவதாரணி என்ற மகளும் இருக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டராக இருக்கும் தம்பதியினர் அவ்வபோது தங்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்கள். போஸ் வெங்கட்டும் சோனியாவும் தனது மகள் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் இவ்வளவு பெரிய மகனும் மகளும் இருக்கிறார்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram

More in CINEMA

To Top