இனி கேஸ் சிலிண்டர் புக் செய்வது ரொம்பவே ஈஸி… உடனே போனை கையில எடுங்க, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க…!

By Nanthini on ஐப்பசி 29, 2025

Spread the love

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் உணவு சமைப்பதற்கு தற்போது கேஸ் அடுப்புகள் பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 89 சதவீதம் வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 56 சதவீதமாக இருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 15.5 கோடி வீடுகளுக்கு இந்த நிறுவனம் எல்பிஜி இணைப்பு வழங்கியுள்ளது. இதனைத் தவிர பல நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்து வருகின்றன.

இதனிடையே கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கு இனி யாரும் சிரமப்பட வேண்டாம். LPG சிலிண்டர்களை இனி ஈசியாக whatsapp மூலம் புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து Hi அல்லது Refill என்று மெசேஜ் செய்தால் மட்டும் போதும். புக் செய்வது, டெலிவரி ட்ராக் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் 24 மணி நேரமும் whatsapp ல் பெற முடியும். பாரத் – 1800 22 4344, Indane – 75888 88824, Hp – 92222 01122 என்ற எண்ணில் whatsapp செய்யலாம்.