“வேண்டாம் சார்… அது ரொம்ப ரிஸ்க்…” டெல்லி நூல் வெளியீட்டு விழா… தமிழக முதல்வர் வேணாமா?… அதிர்ச்சி காரணம்… சென்னையில் நடக்கப் போகும் மெகா சம்பவம்…!

Spread the love

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற ஆங்கில உரைகளின் தொகுப்பு நான்கு நூல்களாக வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நூல்களை வெளியிட, அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள தமிழக முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், டெல்லி நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டால் அதிகளவில் மக்கள் திரள்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளில் கூடுதல் சிரமங்கள் ஏற்படக்கூடும் என்று கருதப்பட்டது.

இதன் காரணமாக, டெல்லி விழாவில் முதல்வர் விஜய் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதே சிறந்தது என்று வைகோவே அவரிடம் தெரிவித்ததாகச் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். டெல்லி நிகழ்வின் சுமையைக் குறைக்கும் வகையிலும், பாதுகாப்பு நலனைக் கருத்தில்கொண்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், டெல்லி நிகழ்வைத் தவிர்த்தாலும், இந்த ஆங்கில உரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை நகரில் தனியாக வெளியிடப்பட உள்ளதாக வைகோ தெரிவித்தார்.

சென்னை நகரில் நடைபெற உள்ள இந்தத் தமிழ் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் வைகோ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். டெல்லி நிகழ்ச்சியைத் தவிர்த்திருந்தாலும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள பிரம்மாண்டமான தமிழ் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Visaka

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

30 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

43 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

51 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

1 மணத்தியாலம் ago