BREAKING: தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 27) பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்… அரசு சூப்பர் அறிவிப்பு..!

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே சுப முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுகள் அதிகமாக நடைபெறும் என்பதால் கடந்த சில மாதங்களாக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆனி மாத சுபமுகூர்த்த தினமான நாளை ஜூன்  27ஆம் தேதி அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும் எனவும் 16 தட்கள் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.