சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகளின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் சென்னை, நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதது. இதனால் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். DGP அலுவலகத்திற்கு மின்னஞ்சல்மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது.
