கடுமையாக திட்டிய பாட்டி…! 1 1/2 வயது குழந்தை உட்பட 3 பேர் உடல் சிதறி பலி… அடுத்து நடந்த சோகம்…!!

By Devi Ramu on ஐப்பசி 14, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமுலு. இவரது மனைவி சிரிஷா. இந்த தம்பதியினருக்கு ரித்விக் என்ற ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீ ராமுலுவின் பாட்டி தலையிட்டு இருவரையும் கடுமையாக திட்டி உள்ளார். இதனால் கோபமடைந்த தம்பதியினர் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி இரவு 11 மணிக்கு கடப்பா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அந்த சமயம் அதிவேகமாக வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து குழந்தைகள் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குழந்தை உயிரிழந்ததை அறிந்த ஸ்ரீ ராமுலுவின் பாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.