BREAKING: காலையிலேயே பரபரப்பு… துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… அலறும் சென்னை…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணனின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த், சசிகலா ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து சில நாட்களாகவே முக்கிய பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.