டெல்லி சட்டமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பட்ஜெட் தாக்கலுக்கு முன் பதற்றம் – தலைவர்கள் பெயரும் இடம்பெற்றதால் பரபரப்பு…!!

By Soundarya on பங்குனி 24, 2026

Spread the love

டெல்லி சட்டமன்றம் மற்றும் விதான் சபா மெட்ரோ நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்து, இன்று (மார்ச் 24, 2026) காலை சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தாவுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு வந்த இந்த மின்னஞ்சலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் சட்டமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்துத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.