“கோட் சூட்.. கூலிங் கிளாஸ்… குழந்தைகளுக்குப் புத்தாடை…” கொச்சியில் 5 பேர் சடலமாக மீட்பு… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on பங்குனி 24, 2026

Spread the love

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஸ்வதி (36) என்பவர், தனது கணவர் மறைந்த துக்கத்திலிருந்தும், தனது மூத்த மகனின் உடல்நலக் குறைபாட்டிலிருந்தும் மீள முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் தனது தாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டிற்குச் சென்ற அவர், அங்கு விபரீத முடிவை எடுத்துள்ளார். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் புத்தாடைகள் மற்றும் கூலிங் கிளாஸ் அணிவிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

   

கணவரின் குடும்பத்தினர் தற்கொலைக்குத் தூண்டியதாக அஸ்வதி எழுதி வைத்திருந்த கடிதத்தைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். தனது தாயுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.