டெல்லி செங்கோட்டையில் கடந்த வாரம் நடந்த கார் வெடி விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் 4 நீதிமன்றங்கள் மற்றும் CRPF வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சாகேத், பாட்டியாலாவில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த பத்தாம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
