“அன்று ரூ.50 லட்சம் கடன், இன்று ரூ.500 கோடி சொத்து”… திமுக அமைச்சரை ஓட ஓட விரட்டணும்… நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு…!

By Nanthini on கார்த்திகை 18, 2025

Spread the love

வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என்று கனிமொழி எம்பி கூறி இருந்தார். ஆனால் இன்று அதைப் பற்றி பேசுவது கிடையாது. ஏனென்றால் டாஸ்மாக் மூலம் 50 ஆயிரம் கோடி வருமானம் வருகின்றது. மது கடைகளை குறைப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு கடையை கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டில் 50 லட்சம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்று 500 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இது நாட்டு மக்களின் பணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்ட திமுகவுக்கு சென்றார். அங்கு இருந்து கொண்டு இவ்வளவு சம்பாதித்துள்ளார். அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உள்ளது. வருகின்ற தேர்தலில் அவரை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரைத் தோற்கடிப்பது இந்த மாவட்ட மக்களின் கடமையாகும் என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.