BREAKING: திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்… சற்றுமுன் பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் கோயில் நிர்வாகம் மரபுப்படியே தீபம் ஏற்றியது. இதனை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் பெரிய வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.