சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலீஸ் தலைமை இயக்குனர் இமெயிலுக்கு நள்ளிரவில் மிரட்டல் வந்துள்ளது. இதனால் பதறிப்போன போலீசார் முதல்வர் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. சமீபகாலமாகவே அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால் சைபர் கிரைம் தீவிரமாக விசாரித்து வருகிறது.
