சென்னையில் உள்ள திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று காலை திரிஷா, முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கும் கவர்னர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தமிழகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
