மும்பையைச் சேர்ந்தவர் பிரபல பாலிவுட் இயக்குனர் விக்ரம் பாட். இவர் ராஸ் ஸ்பீடு 1920 மிஸ்டர் எக்ஸ் 1921 உள்ளிட்ட பல படங்களை இந்தியில் டைரக்ட் செய்து இருக்கிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திரா ஐவிஎப் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அஜய் முர்தியா, இயக்குனர் விக்ரம் பாட் மீது புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் படம் எடுப்பதாக கூறி இயக்குனர் விக்ரம் பாட், தன்னிடம் 30 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்திருந்தார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள புபால்புரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்ரம் பாட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாம்பரியை கைது செய்தனர். இந்த 30 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இயக்குனர் விக்ரம் பாட், அவரது மனைவி மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
