நான் தங்கியிருந்த ஓட்டலில் நேரில் அதை பார்த்தேன்… பீதியை கிளப்பிய வா வாத்தியார் பட நடிகை கீர்த்தி ஷெட்டி!

By Elango on மார்கழி 9, 2025

Spread the love

உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இப்போது வா வாத்தியார் உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். வா வாத்தியர் படம் வருகிற 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி ஷெட்டி பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற ஒரு நேர்காணலில் தனக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவம் குறித்து வெளிப்படையாக கீர்த்தி ஷெட்டி பேசியிருக்கிறார்.

நான் என் அம்மாவுடன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோது பேய் போன்ற ஒரு உருவத்தை நேரில் கண்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். விளக்கு போட்டதும் உடனே அந்த உருவம் காணாமல் போய் விட்டதாகவும் கீர்த்தி ஷெட்டி கூறியிருக்கிறார். அவர் பரபரப்பாக சொன்னது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, அல்லது பரபரப்புக்காக சொல்லி படத்துக்கு பிரமோசன் செய்யும் யுக்தியா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.