Insta-வில் ஸ்டோரி போட்டு, தனது காதலரை அறிமுகப்படுத்திய ஆஷிக் 2 பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்..!

By Mahalakshmi on ஜூன் 20, 2024

Spread the love

பாலிவுட் பிரபல நடிகையான ஷர்த்தா கபூர் தனது காதலரை அறிமுகம் செய்து இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷர்த்தா கபூர். இவர் பாலிவுட்டில் 70 படங்களுக்கு மேல் வில்லன் நடித்து பிரபலமான சக்தி கபூரின் மகள் ஆவார். பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் எளிதில் திரைக்கு வருவது என்பது அரிதானது அல்ல. அதன் படி 2010 ஆம் ஆண்டு டீன் பாட்டு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

   

   

பின்னர் 2013 ஆம் ஆண்டு வெளியான ஆஷிக் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். அதில் பாடகி கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல இளைஞர்களின் மனதை வென்றார். இதைத் தொடர்ந்து ஏபிசிடி, ஸ்ட்ரீட் டான்சர் உள்ளீட்டு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படங்களில் நடிகர் வருண் தவான் மற்றும் பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடி தன்னை ஒரு சிறந்த டான்ஸர் என்பதையும் நிரூபித்து விட்டார்.

 

பாகுபலி படத்திற்கு பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான பிரபாஸின் சாஹே திரைப்படத்திலும் பிரபாஸுக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அந்த திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இன்றளவும் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார். நல்ல கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவருக்கு மிகப்பெரிய அளவு ரீச் கிடைத்துள்ளது. மேலும் கவர்ச்சியிலும் இவர் பஞ்சம் காட்டுவதே கிடையாது. இவர் சினிமாவில் நடிக்க தொடங்கியது முதலில் சில பிரபலங்களுடன் காதல் கிசு கிசுவில் பேசப்பட்டார். ஆனால் இறுதியாக எந்த ஒரு செய்தியும் உறுதி செய்யப்படவில்லை. ஆஷிக் 2 திரைப்படத்தில் நடித்தபோது அந்த நடிகருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார்.

இருப்பினும் அதைக் குறித்து யாரும் வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில் ஷர்தா கபூர் தானே தனது காதலரை அறிமுகம் செய்திருக்கின்றார். அதாவது Rahul Mody உடன் அவர் காதலில் இருப்பதாக கூறப்படுகின்றது. அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து திருடிய என் தூக்கத்தை திருப்பி கொடு என்று பதிவிட்டு இருக்கின்றார். இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் காதலர்கள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.