நடிப்பு அரக்கனால் புஷ்பா 2 படத்துக்கு 40 கோடி நஷ்டமா..? இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு.. வெளியான தகவல்..!

By Mahalakshmi on ஜூன் 20, 2024

Spread the love

நடிகர் பகத் பாஸிலால் புஷ்பா 2 திரைப்படத்திற்கு 40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.

தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவர் தெலுங்கில் மிகப் பிரபலமாக இருந்தாலும் இந்திய அளவில் பிரபலமாகவில்லை. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தான் அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது. இந்த திரைப்படம் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை இந்தியா முழுவதும் வசூல் செய்தது.

   

   

இதனால் அவர் உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டார். முதல் பாகத்தின் பிரம்மாண்டம் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகின்றார். அதன்படி இந்த படத்தின் சூட்டிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வந்தது கடந்த வருடம் இந்த திரைப்படத்திலிருந்து கிளிப்பிங்ஸ் வெளியானது.

 

மேலும் அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்தில் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இந்த பாகமும் மெகா ஹிட் அடிக்கும் என நம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முதலில் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் ஆறாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இரண்டு பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கின்றது. மேலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் வைப் செய்து வருகிறார்கள். இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

அதாவது இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த பகத் பாஸில் முதலில் புஷ்பா 2 திரைப்படத்திற்காக சில தேதிகளை கொடுத்திருக்கின்றார். ஆனால் படக்குழுவினர் அதனை ஒழுங்காக பயன்படுத்தாத காரணத்தினால் வேறு திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டார். சில காலம் கழித்து மீண்டும் பகத் பாஸில் தேதியை கொடுத்தாராம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் படத்தின் சூட்டிங் தள்ளிப்போன காரணத்தால் 40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் தற்போது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.