உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து இறந்த நபரின் உடலை சாலையில் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது. உயிரிழந்தவர் ஹிருதய் லால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில் குடும்ப உறுப்பினர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக சாலையில் உடலை வீசிதாக கூறப்படுகிறது. வீடியோவில் ஆம்புலன்ஸ் பின்புறத்தில் தொங்கி கொண்டிருந்த நபர் ஒருவர் உடலை சாலையில் பாதியிலேயே இழுத்து செல்வதை பார்க்க முடிகிறது. பிறகு கீழே தள்ளி விடுகிறார். சம்பவ இடத்தில் இருந்த போலீசார் அவரை தடுக்க முயற்சிக்கிறார்கள். அருகில் இருந்தவர்கள் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்து உடலை நோக்கி ஓடுவதையும் பார்க முடிகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதி அன்று மது போதையில் இருந்த ஒருவருக்கும், இறந்தவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வன்முறையாக மாறி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஹிருதய் லால் சிகிச்சைக்காக லக்னோவிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து உயிரிழந்தவரோடு சண்டையிட்ட குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு இறந்தவரின் குடும்பத்தினர் சிலர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஆம்புலன்ஸில் இருந்து உடலை சாலையில் வீசியதாக கூறப்படுகிறது. தற்போது இறந்த உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
गोंडा में दिल दहला देने वाला मामला — चलती एंबुलेंस से गेट पर लटके व्यक्ति ने स्ट्रेचर समेत शव को सड़क पर फेंका, एंबुलेंस मौके से फरार। मृत युवक की इलाज के दौरान लखनऊ में हुई थी मौत, पैसों के लेनदेन में हुई मारपीट से घायल हुआ था युवक। परिजनों ने सड़क पर शव उतारकर जताया आक्रोश,… pic.twitter.com/D8pgJD2GP9
— AajTak (@aajtak) August 5, 2025
