தேனி மாவட்டத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த அழகர்சாமி ஜெயலட்சுமி தம்பதியின் மகன் நவீன் குமார் (25). இவர் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தன் நண்பருடன் வெளியே சென்று அவர் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனே போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய போலீசார் நாட்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததால் குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நவீன் குமாரை இறுதியாக பார்த்த நண்பரை கைது செய்து விசாரணை நடத்தியபோது மது போதையில் ஏற்பட்ட தகராறு நவீன் குமாரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசி விட்டதாக ஒப்புக்கொண்டார். உடனே தீயணைப்பு துறையினருடன் இணைந்து ஆற்றில் உடலை தேடத் தொடங்கிய போலீசார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உப்பு கோட்டை கருப்புசாமி கோவில் அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் நவீன் குமாரின் உடலை கண்டறிந்தனர்.
பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதனை கண்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர். அங்கு அவர்கள் போராட்டமும் நடத்திய நிலையில் போலீசார் சமாதானம் பேசியுள்ளனர். இந்த கொலை சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வின் பின்னணி குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…