“சாக்கடையில் மிதந்த சடலம்…” பிறந்தநாள் பார்ட்டியில் நுழைந்த போலீஸ்…. வாலிபரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக நேற்று மதியம் 2 மணியளவில் போலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில், திறந்தவெளியில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய 8 பேரைப் போலிஸார் வளைத்துப் பிடித்ததாகவும், அதில் லஞ்சம் வாங்கிய பிறகு மற்றவர்களை விட்டுவிட்ட நிலையில், இந்த வாலிபர் போலிஸ் காவலில் இருந்து தப்பியோடிச் சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், “போலிஸார் அடித்துத் சாகடித்துவிட்டுச் சாக்கடையில் வீசி நாடகமாடுகிறார்கள்” என அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மல்லுபுரா போலிஸார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலிஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய வாலிபர் சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.