இந்த நடிகரை வச்சி படம் எடுத்தா செட்டில் 2 பேரும் அடிச்சுக்கிட்டு மாயிவீங்க.! பாலாவை வம்பு இழுத்த ப்ளூ சட்டை மாறன்..

By Ranjith Kumar on பங்குனி 1, 2024

Spread the love

பாலாவும் தெலுங்கு நடிகர் பாலையா இணைந்து படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்று ப்ளூ சட்டை மாறன் இணையதளத்தில் ட்ரீட் ஒன்று போட்டிருக்கிறார். அது தற்போது கீழே பார்ப்போம். 1999 ஆம் ஆண்டு சேது படம் மூலம் தமிழ் திரையுலகில் ஜொலிக்க ஆரம்பித்தவர் தான் இயக்குனர் பாலா. அந்த சமயத்தில் அவருக்கு பெரிதாக எந்த படமும் போகவில்லை, வீடு என்ற படத்தை இயக்கி மாபெரும் தோல்வியைக் கண்டு இருந்த சமயத்தில் விக்ரம் அவர்களை சந்தித்து இருவரும் இணைந்து பெரிய படைப்பு ஒன்றை கொடுத்தார், அந்த படைப்பிற்கு பின்னால் தமிழ் திரையுலகமே வியந்து போனது.

அதன் பின்னதாக பிதாமகன், நந்தா, ராட்சசி போன்ற பல படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வந்து கொண்டிருந்தார். தற்போது சில காலமாக மீண்டும் அவருக்கு படம் எதுவும் சரியாக போகாமல் இருந்தது, தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் படம் இயக்கி வந்தார், அதுவும் சில பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் அருண் விஜய் உடன் இணைந்து படத்தை இயக்கி வருகிறார், இவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன்(பாலையா) அவர்களை வைத்து இயக்கினால் எப்படி இருக்கும் என்று ப்ளூ சட்டை மாறன் விளையாட்டாக பதிவு ஒன்று பதிவிட்டிருந்தார்,

   

அதற்கு பல விமர்சனங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. லெஜன்ட், வீரசிமா ரெட்டி, ஜெய் சிம்மா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து மூத்த நடிகராக இருந்தாலும் தற்போது இளம் நடிகருடன் போட்டி போட்டு தெலுங்கு திரை உலகை முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பாலையா அவர்கள் மிக கரரான ஆள் என்று பலருக்கும் தெரியும், மிகவும் முன்கோவக்காரர் எதற்கெடுத்தாலும் படக் என்று யாரைப் பற்றி யோசிக்காமல் பேசி விடுவார். பாலா அவர்களும் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களை மனிதாபிமானம் பார்க்க மாட்டார்,

   

அவருக்கு தேவையான நடிப்பை வெளிக்கொண்டு வருவதற்காக நடிகரை எந்த அளவுக்கு நாள அடித்து துன்புறுத்துவார். தற்போதைய இவர்கள் இருவரும் சேர்ந்து படம் இயக்கினால் எப்படி இருக்கும்? பாலா அவர்களின் இயக்கத்தில் பாலை அவர்கள் நடித்தால் அந்த படபிடிப்பு தளத்தில் போர்க்களம் போல் காட்சியளிக்கும். உண்மையில் இவர்கள் இருவரும் இணைந்தால் அந்த இடமே ரணகளமாகும் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள் பாலா அவர்கள் ஒன்று சொல்ல பாலை அவர்கள் இதற்கு எதிராக மற்றொன்று செய்ய என்று பல பிரச்சினை கூடும். இயக்குனர் பாலா நேர்த்தியான எதார்த்தமான கதையை உருவாக்குவார். பாலையா அவர்கள் மிக கமர்சியலான இரண்டு ஃபைட், 4 ரொமான்ஸ், 3 பாடல்கள் என்று ஓபனிங் சாங் வைத்து ரசிகர்களை கமர்சியலாக கவர்ந்து இழுக்கும் இவர், இருவருக்கும் வேறு வேறு சிந்தனையில் இருப்பதால் இருவருக்கும் துளி கூட செட் ஆகாது என்று ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் பதிவிற்கு விமர்சித்து வருகிறார்.