கௌதம் மேனனின் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இன்று வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் “ஜோசுவா இமைப்போல் காக்க” படம். இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மறுபடியும் கம்பெர் கொடுத்தாரா? ஜோசுவா கேரக்டரில் நடித்த பிக் பாஸ் வருன் அவர்கள் நடிப்பை படத்தில் சிறப்பாக காண்பித்திருக்கிறாரா? மற்றும் இப்படத்தின் கதை சுருக்கத்தை பார்ப்போம்.
காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், மின்னலே போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருந்தவர்தான் கௌதம் மேனன். தற்போது அவர் நீண்ட காலமாக மொக்க படங்களை எடுத்து வெளியிட்டு தன் மார்க்கெட்டை அவரே சரிய வைத்திருக்கிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா எப்போதுதான் மக்களை நோக்கி வருமென்று கேட்ட கேள்விக்கு? ஆறு வருடங்களுக்கு பின் வந்து, அதற்கு அப்புறம் ஏன் இப்படம் வெளியானதோ என்று கேள்வி கேட்கும் படி ஆகிவிட்டது,
அதன் பின்னதாக இப்போது பெண்டிங்கில் இருக்கும் துருவ நட்சத்திரம் படம் வருமா வராதா என்ற சந்தேகத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் கௌதம் மேனன் அவர்கள் சிறிய இடைவெளி காலத்தில் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்தார், லியோ, வெந்து தணிந்தது காடு போன்ற பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்திருக்கிறார். தற்போது இரண்டு வருட காலங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட ஜோசுவாய் இமைப்போல் காக்க படத்தில் பிக் பாஸ் வருண் மற்றும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் மனைவி ராஹேய் நடிப்பில் மற்றும் இந்த படத்தில் கிருஷ்ணா, மன்சூர் அலி கான், டிடி நீலகண்டன், யோகி பாபு, விசித்ரா உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி உள்ளது.
லவ் ட்ராமா ஆக்சன் போன்ற பல கலவையாக கலந்த வெளியான இப்படம் பெரிதாக மக்களிடையே சேரவில்லை என்று கூறலாம். இப்படத்தின் கதை; ஜோசுவா காதலை ஏற்க மறுக்கும் குந்தவையை ஒரு கூலிப்படை கும்பல் கடத்த முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து தன் முன்னால் காதலியை ஜோஸ்வா ஒரு பாடிகாட் போல் காப்பாற்றுவதே கதை ஆகும். கௌதம் மேனன் படம் என்றாலே காதலுக்கு மிக முக்கியத்துவமாக இருக்கும், ஆனால் இப்படத்தில் காதலுக்கு அதிக இடம் கொடுத்திருந்தாலும் அது பெரிதளவு ரசிகர்களுக்கு கனெக்சன் ஆகவில்லை,
அதுபோல் 12 சண்டைக்காட்சி வைத்து ரசிகர்களை மிகவும் போர் அடிக்கும் படி வைத்து விட்டார், எதற்கெடுத்தாலும் சண்டை போடும் வருண் அவர்கள் தன் நடிப்பை வெளிக்காட்டும் விதமாக எந்த ஒரு நல்ல சீனும் அமையவில்லை. இப்படத்தில் கௌதம் அவர்களுக்கும் கம் பேக் என்று கூற முடியாது, ஆனால் வருண் அவர்களுக்கு நல்ல படமாக அமைந்திருக்கிறது என்று ஒரு அளவுக்கு கூறலாம். இப்படம் நீண்ட பிரச்சனைகளுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது ஆனால் எதிர்பார்த்த அளவு கதை திரைக்கதை இல்லை.
