தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவரது தந்தை தமிழ் சினிமாவில் எடிட்டராக பண்ணியாற்றியாவர் மற்றும் இவரது சகோதரர் மோகன் இயக்குனர் ஆவார். இவரது அண்ணன் இயக்கத்தில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானதால் இவரை ஜெயம் ரவி என்று மக்கள் அழைத்தனர்.
முதல் படத்தின் மூலமாகவே பேரும் புகழையும் பெற்ற ஜெயம் ரவி தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி உனக்கும் எனக்கும் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற சாக்லேட் பாய் கதைகளில் நடித்தார். அதற்கு அடுத்ததாக கமர்சியல் படங்களுக்கு மாறி தனி ஒருவன் பூமி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.
அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் ஜெயம் ரவி. தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் காமிட்டாகி மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் Brother.
இந்த Brother திரைப்படம் எப்படி இருக்கு என்பதை பற்றி ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால் அவர் இந்த படத்திற்கு மிகவும் நெகடிவாக ரிவ்யூ கொடுத்திருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் கொடுத்த ரிவியூ என்னவென்றால் படத்தில் திரை கதையே சரியாக இல்லை மிகவும் மோசமாக இருக்கிறது.
நிறைய இடத்தில் மிஸ்டேக் இருக்கிறது Continuity இல்லாமல் அங்கும் இங்குமாக கதை நகர்கிறது. சில இடத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்கும் இருக்கிறது. நன்றாக நடிக்கும் நடிகர்கள் கூட இந்த படத்தில் மிகவும் சராசரியாருக்கும் கீழாக தான் நடித்திருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த படம் தியேட்டரில் அனைவரையும் தூங்க வைத்துவிட்டது என்று ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.