52 படம் வெளியாகி ஒன்னு கூட ஓடல.. மற்ற சினிமாக்களோடு ஒப்பிட்டு தமிழ் சினிமாவை பங்கம் பண்ணிய Blue சட்டை..

By Ranjith Kumar on மார்ச் 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் காலகாலமாக பல வெற்றி படங்களை கொடுத்த பல இயக்குனர்களும் பல நடிகர்களும் உள்ளார்கள். அதில் ஆரம்ப காலகட்டத்தில் நாயகன், முதல்வன், தளபதி போன்ற பல படங்கள் அடங்கும். தற்போது தமிழ் சினிமாவை தாங்கிப் பிடித்த படங்களான சூரரை போற்று, ஜெய் பீம், கார்கி போன்ற பல படங்கள் தற்போது இரண்டு ஆண்டுகள் முன்னால் வரையும் பல வெற்றிகளை கொடுத்த படங்கள் ஆகும்.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போ வரை இருக்கும் பிரபல இயக்குனர்களான பாலு மகேந்திரா, பாக்கியராஜ், பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்களும் தற்போது வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், டிஜே ஞானவேல் போன்ற இயக்குவனர்களும் பல கருத்துள்ள படங்களை இயக்கிய மக்களுக்கு அள்ளித் தருகிறார்கள். ஆனால் தற்போது கடந்த இரண்டு வருட காலமாக எந்த ஹிட் படமும் கொடுக்காமல் தமிழ் திரையுலகமே துவண்டு போய் உள்ளது. அந்த வரிசையில் வெவ்வேறு மொழிகளில் பல படங்கள் ஹிட் கொடுத்ததை வைத்து ப்ளூ சட்டம் மாறன் தமிழ் சினிமாவை விமர்சித்து ட்வீட் ஒன்று போட்டு உள்ளார்.

   

பாலிவுட்டில் கடந்த வருடம் வெளியாகி திரை உலகை உலுக்கிய படங்கள் ஆன; பிரசாந்த் வர்மா அவர்கள் இயக்கத்தில் வெளியான Hanuman, அமித் ஜோசி அவர்கள் இயக்கத்தில் காமெடி டிராமா மற்றும் சயின்ஸ் பிக்சன் கலவையில் சாகித் கபூர் நடிப்பில் வெளியான “TBMAUJ” படமாகும். ஆதித் சுகாஷ் இயக்கத்தில் வெளியான Article 370.

   

மலையாளத்தில் வெளியாகி திரை தெறிக்க ஓடிய மூன்று படங்கள் உள்ளது. அதில் மம்முட்டி அவர்கள் நடித்து வெளியாகி மாபெரும் படைப்பை படைத்த பிரம்மயுகம் மற்றும் புது இயக்குனர், புது முகங்கள் நடித்த வேளியாகி பட்டையை கிளப்பிய படமான பிரேமலு, மஞ்சமெல் பாய்ஸ், இப்படம் கிட்டத்தட்ட 20 கோடியில் எடுக்கப்பட்டு 200 கோடி வரை வசலை தட்டி தூக்கியது.

 

கடந்த ஆண்டு கன்னட மொழியில் காமெடி டிராமா மட்டும் ஆக்ஷன் கலவையில் அணில் குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் தான் “Upadhyaksha” படமாக. மலைகா வசுபால், பி. ரவிசங்கர், சாது கோகிலா, வீணா சுந்தர் மற்றும் தர்மண்ண கடூர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி கன்னடம் முதல் இந்திய அளவு வரை மாபெரும் வெற்றியை கண்டதை படம்.

ஆனால் தமிழில் கடந்த ஆண்டு மட்டும் 52 படங்கள் வெளியாகி ஒரு படம் கூட ஹிட் ஆகவில்லை, கிட்டத்தட்ட ஹிட் ஆகாத ஆறு படங்களுக்கு சக்சஸ் மீட் வைத்து வெற்றியை கொண்டாடி உள்ளார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் தமிழ் படங்களை கிளுகிளு என்று கிழித்து தொங்கவிட்டு இணையத்தில் கலாய்த்து பதிவு ஒன்று போட்டுள்ளார். தற்போது அந்த போஸ்ட் ரசிகர் மதியில் பயங்கர வைரலாகி வருகிறது.