பாலிவுட்டை கலக்க இருக்கும் இசை வாரிசு.. பிரபல இயக்குனருடன் PAN-இந்தியா அளவில் கால் பதிக்க உள்ள ஜிவி பிரகாஷ்..

By Ranjith Kumar

Published on:

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பட தயாரிப்பாளர் இன்று பன்முகம் கொண்டு திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, புவனா, பிரியங்கா, பிஹா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த “வெயில்” படத்தில் மாபெரும் இசையை அமைத்து தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்று அறிமுகமானார்.

இவர் இதற்கு முன்னால் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு துணை கம்போசராக பணிபுரிந்து வந்தார், இவரது மாமா ஏ.ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசை அமைப்பாளர் உடன் பணிபுரிந்துள்ளார். அதன் பின் அவர் வெயில், மதராசபட்டினம், மயக்கம் என்ன, தலைவா போன்ற பல பிரம்மாண்ட படங்களில் இசையமைத்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

   

அதன் பின்னதாக நடிப்பில் ஆர்வம் கொண்டு டார்லிங் என்ற படம் மூலம் தமிழ் திரை உலகில் முதல் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷா இல்லனா நயன்தாரா, புரூஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படங்கள் நடித்துள்ளார். தற்போது பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் அவர்களுடன் மீண்டும் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அனுராக் காஷ்யப் இயக்கிய அக்லீ என்ற படத்தில் மூலமாக அவருடன் இணைந்து பணிபுரிந்த ஹிந்தியில் முதல் முதலில் இசை அமைத்தார் ஜிவி பிரகாஷ்.

அதன் பின்னதாக 11 வருடம் கழித்து மீண்டும் இவருடன் இணைந்து கோலிவுட்டில் அனுரா கேசப் அவர்கள் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படம் PAN-இந்தியா அளவில் உருவாக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கிட்டத்தட்ட பல வருடம் கழித்து இவர்கள் இணையும் காம்போவை பார்த்து ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar