இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இது பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியானது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் Red Giant நிறுவனம் மூலமாக இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து யோகி பாபு, வினய் ராய், சுனில், சடகோபன் ரமேஷ், வினோதினி வைத்தியநாதன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனங்களை மக்கள் கூறியிருக்கிறார்கள். ரவி மோகன் மற்றும் நித்யா மேனனின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருக்கிறது, ஏ ஆர் ரகுமானின் இசை நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு பீல் குட் மூவி இல்லை என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கூறியிருக்கிறார். அதைப் பற்றி இனி காண்போம்.
இந்தப் படத்தைப் பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறுகையில் இந்த படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய செயற்கை கருத்தரிப்பு, Gay ரிலேஷன்ஷிப், லிவிங் டுகெதர் போன்ற பல விஷயங்களை கிருத்திகா உதயநிதி எடுத்து கூறி இருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் இசை நன்றாக இருக்கிறது. ரவி மோகன் நித்யா மேனன் நடிப்பும் பாராட்டக் கூடியது. இந்த கதை மிகவும் ஸ்லோவான ஒரு கதை. ஆனால் அதை மேக்கிங்கில் கிருத்திகா உதயநிதி பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்.
மேலும் இது இந்த காலத்துக்கு தகுந்தக்கூடிய கதை என்பதால் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதை புரிந்து கொள்பவர்களால் இந்த கதையை ஏற்றுக் கொள்ள முடியும். மொத்தத்தில் இது ஸ்லோவான ஒரு படம் தான் ஆனால் மேக்கிங் இல் நன்றாக காட்டியதால் நல்லதொரு ஃபீல் குட் மூவி தான் என்று லைட்டாக சொல்லிவிட்டு முடித்து விட்டார் ப்ளூ சட்டை மாறன். இதனால் நெட்டிசன்கள் அதை பார்த்த பின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா உதயநிதி எடுத்த படம் என்பதால் ப்ளூ சட்டை மாறன் இப்படி லைட்டாக ரிவ்யூ சொல்லிவிட்டாரா? எப்போதும் ஒரு சூப்பரான படம் வெளி வந்தாலே அதில் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து கூறுபவர் இப்படி பேசி விட்டாரே இதற்கு பின்னால் அரசியல் இருக்குமோ என்று பேசி வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…