நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதன்படி அவருடைய நடிப்பில் வெளியான டாடா மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் திரைப்படத்தில் கவின் ஹீரோவாக இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து உள்ளன. இந்த நிலையில் நேற்று பிளடி பெக்கர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியையும் சென்னையில் பட குழுவினர் நடத்தினர்.

இதில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் நெல்சன் திலிப் குமார், இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் மற்றும் கவின் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டு படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின் மூலம்தான் சிவபாலன் முத்துக்குமார் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். அதனைப் போலவே இயக்குனர் நெல்சன் இப்படம் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் நெல்சன், ஜெயிலர் படம் ஹிட் ஆனதும் பிளடி பெக்கர் படத்தை பண்ணலாம் என்று சிவபாலனை கூப்பிட்டேன். அப்போது அவர் கவினை வைத்து படம் பண்ணலாம்னு இருக்கேன் என்று கூறினார்.

அவர் சொன்னதை கேட்டதும், சிவபாலன் நான் உனக்கு ஏதாவது பண்ணலாம்னு இருக்கேன் ஆனா நீ உன் பிரண்ட இதுல கொண்டு வரலாம்னு பாக்குற. உன் நண்பனுக்கு ஏதாவது செய்யலாம்னு அவரை கொண்டு வந்து கடைசில நீயும் கவிழ்த்து என்னையும் கவுத்துறாத, இந்த படத்துக்கு கவின் வேண்டாம் என்று சொன்னேன். நீ சொல்ற கதைக்கு கவின் சுத்தமா செட் ஆக மாட்டார் என்று கூறினேன். நீ உன்னுடைய பிரண்ட்ஷிப்பை தனியா வச்சுக்கோ நான் கவினுக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சா அதை தனியா பண்ணிக்கிறேன் இதுக்குள்ள அவனை கொண்டு வராத என்று சொன்னேன்.

பிறகு தனுஷ் அல்லது விஜய் சேதுபதி யார்கிட்டயாவது பேசலாம் என்று சொன்னதும் அப்போதைக்கு தலையாட்டிட்டு போயிட்டு இரண்டு நாள் கழிச்சு வந்து இல்ல சார் நான் கவின் வச்சு இந்த படத்தை பண்றேன் என்று கூறினார். எந்த ஆங்கிளில் பார்த்தாலும் கவின் இந்த படத்துக்கு செட் ஆக மாட்டார் என எனக்கு தோணுச்சு. பிறகு கடைசியா அவன்கிட்ட கேட்டு கவின் வச்சு பண்ணலாம்னு சொன்னதும் சரி பண்ணிக்கோ என்று கூறிவிட்டேன். பிறகு கவிதை அழைத்து வந்து ஒரு டெஸ்ட் பண்ணாங்க. அப்போ அவரோட லுக்க பாத்து எனக்கு புடிச்சிருச்சு. அப்புறம் தான் இவர் இந்த கேரக்டருக்கு சரியா வருவார் என்று முடிவு பண்ணேன் என்று நெல்சன் கூறியுள்ளார்.
